Saturday, 19 June 2010

OPINION: what is happening here? - a poem by Thamizhpodiyan

என்ன நடக்குது இங்க?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு...
ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை
எல்லாம் தலைகீழா நடக்குதோ?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது
புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது
புதுசு புதுசா கனக்க முளைக்குது
எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

தமிழர் பேரவை என்றோம்
உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம்
ஓங்கி குரல் கொடுப்போம் என்றோம்
தோள் கொடுத்தோம்.

வட்டுக்கோட்டை என்றோம்
தமிழீழ தனியரசு என்றோம்
வாக்குப்போட்டம்.

நாடு கடந்த அரசு என்றோம்
மதினுட்ப அரசியல் சாணக்கியம் என்றோம்
அதுக்கும் வாக்குப்போட்டம்.

இப்ப மக்களவை எண்டுகினம்????
எத்தின தரம் தேர்தல் வைக்கிறது?
எத்தின தரம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறது?

என்ன நடக்குது இங்க?
எனக்கொண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..


பேரவையை கூட்டினது உலகத்தமிழர் பேரவை
வட்டுக்கோட்டையை செய்தது தமிழீழ நலன் விரும்பிகள்
நாடு கடந்த அரசை செய்தது மதியுரைக்குழு
மக்களவையை செய்யுறது யார்?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

மக்களவை நாடுகடந்த அரசின்ர அடித்தளம் எண்டுகினம்
ஆணிவேர் எண்டுகினம்
பக்க பலம் எண்டுகினம்
இரட்டைக்குழல் துப்பாக்கி எண்டுகினம்
நாடு கடந்த தமிழீழ அரசின் தூண் எண்டுகினம்

அடித்தளமும் ஆணிவேரும் தூணும் இல்லாமலா
நாடு கடந்த அரசு அமைத்தார்கள்?
கேக்கிறவன் கேணையன் எண்டால் கேப்பையிலும் பால் வழியும்
எண்ட பழமொழிதான் ஞாபகம் வருது....

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...


பேரவை,வட்டுக்கோட்டை,நாடு கடந்த அரசு 
செய்ய வேண்டிய வேலை கனக்க கிடக்கு
ஒண்டுக்கு மூண்டு கிடக்கு
பிறகேன் மக்களவை?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

மே 18 இக்கு பிறகு
கே.பி எண்டினம்
இல்லை கஸ்ரோ எண்டினம்
முதல்ல கே.பி துரோகி ஆனார்.
பிறகு கஸ்ரோ துரோகி ஆனார்.

என்ன நடக்குது இங்க?
எனக்கொண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ..

சிலர் ஆய்வு செய்கினம்
சிலர் கட்டுரை எழுதுகினம்
சிலர் கவிதை எழுதுகினம்
சிலர் ஈ மெயில் அனுப்புகினம்
இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

கே.பி குறூப் எண்டு ஒண்டு
கஸ்ரோ குறூப் எண்டு ஒண்டு
இப்ப நோர்வே குறூப் எண்டு இன்னொண்டாம்!!!
"அண்ணை இருக்கிறார்.வருவார்" எண்டு இன்னொரு குறூப்.
யார் எண்டு சொல்லமாட்டம் ,காலம் வரும் வெளிப்படுவம் எண்டு இன்னொரு குறூப்.
அப்பிடியெண்டா நாங்கள் எந்தக்குறூப்?
தமிழ் மக்கள் எந்தக் குறூப்?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

ஒரு நேர உணவுக்கும் வழியில்லை
கற்பை காக்கவும் வேலியில்லை
நிம்மதியாய் படுத்துறங்கவும் பாயில்லை
நித்திரையே இல்லை
பொழுது விடியுமா என்ற ஏக்கம்
விடிந்தாலும் உயிரோடு இருப்போமா என்ற ஏக்கம்
வீடும் இல்லை, தாலியும் இல்லை,குங்குமம் இல்லை.

நிம்மதியாய் பொழுது விடிதலும் ஒரு நேர உணவும் தான் எங்கள் உறவுகளுக்கு இப்போது தமிழீழம்...!!!
கோவணத்துக்கே வழியில்லாமல் ஒட்டிய வயிறோடு உறவுகள் அங்கே......

இங்க என்ன நடக்குது
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

சிலர் ஆய்வு செய்கினம்
சிலர் கட்டுரை எழுதுகினம்
சிலர் கவிதை எழுதுகினம்
சிலர் ஈ மெயில் அனுப்புகினம்
இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

சாதாரண அப்பாவித்தமிழர் நாங்கள்
தெளிவாக குழம்பிப்போய் இருக்கிறம்
குழம்பாமல் தெளிவா இருக்கிறவை 
விளக்கமா தெளிவுபடுத்துங்கோ

எவர் வேண்டுமானாலும் பேசலாம்
என்ன வேண்டுமானலும் செய்யலாம்
எதை வேண்டுமானாலும் எழுதலாம்

என்ன நடக்குது இங்க?
எனக்கொண்டும் விளங்கயில்லை
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

இதையெல்லாம் எழுதும் அருகதையும் யோக்கியமும் தகுதியும் எங்களுக்கு இல்லைத்தான் - ஆனால் எழுதும் வல்லமை திராணி இருக்கிறது.
இதை சொல்லும் எங்களை ஒநாய் என்றும் துரோகி என்றும் 
பதிவு செய்யலாம்,சொல்லலாம்.
பழகிப்போச்சு.

எல்லோரும் மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் நம்பியே வண்டி ஓட்டுகிறோம்.
உணர்வுகள் மழுங்கடிக்கப்படும் போது, இல்லை எழுச்சி சிதறடிக்கப்படும் போது
மக்கள் விழித்துக்கொள்ளுவர்.
அப்போது தைரியமாய் மக்களின் கேள்விகளை யார் எதிர்கொள்கிறார்களோ?
அவர்களே பிழைத்துக்கொள்வர்.
மற்றவரெல்லாம் காணாமல் போவர்.

இலட்சியம் ஒன்று,நோக்கம் ஒன்று,போகும் இடமும் ஒன்று தான் - ஆனால்
போகும் பாதைகள் தான் வேறு வேறு என்கிறார்கள்
எத்தனை நாளைக்குத்தான் இந்த செப்படி வித்தை?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

தொலைந்து போன தமிழனின் விடுதலை விதையை
பட்டப்பகலில் சூரிய ஒளியில் இலகுவாய் தேடாமல்
நட்ட நடு இரவில் ஆளுக்கொரு திசையில் குருட்டு வெளிச்சத்தில் தேடுகிறோம்.
நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கிறோம்
ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அநாதைகளாக நின்று அழுகின்றன.

என்ன நடக்குது இங்க?
எனக்கொண்டும் விளங்கயில்லை
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

ஒன்றுபட்ட தமிழினம் உருக்குலைஞ்சு போவதைப்பார்த்து
சிங்களவன் வேடிக்கை பார்த்து சிரிக்கிறான்.
எங்களின் தலைகளில் நாங்களே மண்ணை அள்ளிப்போடுவதைப் பார்த்து
எள்ளி நகையாடி எக்காளமிடுகிறான் ராஜபக்ச.!
பேரவை என்றும்,நாடுகடந்த அரசு எண்டும்,வட்டுக்கோட்டை எண்டும் உடைந்து கிடக்கிறது புலம்பெயர் தமிழினம்
விழுந்தவனை மீண்டும் ஏறி மிதிக்கவா இன்னொரு தேர்தலும்?மக்களவையும்?

முடிஞ்சா இருக்கிற வீட்டை பலப்படுத்துங்கோ
அத்திவாரம் சரியில்லை,தூணுகள் சரியில்லை எண்டு 
இருக்கிற வீட்டை இடித்துவிட்டு இன்னொரு வீட்டை கட்ட வேண்டாம்.
ஏற்கனவே வீடு கட்ட நிறைய செலவு செய்தாச்சு.
அத்திவாரம் போடுறம் எண்டும்,தூணுகள் கட்டுறம் எண்டும்
இருக்கிற வீட்டை உடைக்க வேண்டாம்?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

அண்ணை இருக்கிறார் எண்ட ஒரு துளி நம்பிக்கை இருந்தது 
இப்ப அதுவும் இல்லை..!!!
புலம்பெயர் தேசத்து பிச்சல்களும் புடுங்கல்களும்தான் இந்த நம்பிக்கையீனத்துக்கு காரணம்.
கழுத்தறுப்புகளும்,காட்டிக்கொடுத்தல்களும்,பழிவாங்கல்களும் அண்ணையின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றன.!

கிண்டி கிழறப்பட்ட துயிலும் இல்ல எலும்புக்கூடுகளின் நடுவே...!!!
வீரமரணம் அடைந்த தீபன் அண்ணை,விதுசா அக்கா,துர்க்கா அக்கா,சாள்ஸ் அன்டனி,சொர்ணம் அண்ணையின் சாம்பல்களுக்கு நடுவே...!!!
அண்ணையையும் தேடுகிறோம்......
விம்மி வெடிக்கும் நெஞ்சோடு...
குருதி வடியும் கண்களோடு...

ஆனால் அண்ணை உயிரோடுதான் இருக்கிறார்
எங்களின் வீடுகளின் சுவர்களில் கம்பீரமாக படமாக....!!!!

கேள்வி கேட்பவர்களையெல்லாம் துரோகிகள் ஆக்கும்
குறூப்பிடம் எங்களின் பெயர்களையும் பரிந்துரையுங்கள்
ஏற்கனவே நாங்கள் துரோகிகள் - இனிமேல்
இதையெல்லாம் எழுதிய பின் லெப்டினன் கேணல் துரோகிகள்

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...

சிலர் ஆய்வு செய்கினம்
சிலர் கட்டுரை எழுதுகினம்
சிலர் கவிதை எழுதுகினம்
சிலர் ஈ மெயில் அனுப்புகினம்
இதுவா 4ம் கட்ட ஈழப்போர்?

என்ன நடக்குது இங்க?
எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல...
யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ...


-தமிழ்ப்பொடியன்-

No comments: