Saturday, 7 February 2009

புலி தேய்ந்து புள்ளியானது!

-சதாசிவம். ஜீ.

விடுதலைப்
புலிகள் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமது உறுப்பினர்களையே
பலிகொடுத்துள்ளனர். அதேநேரம் 'துரோகி'
என்ற நாமத்தின் பெயரால்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பலியெடுத்திருக்கிறார்கள். அதேபோல
ஆயிரமாயிரம் பொதுமக்களும் யுத்தத்தில் அகப்பட்டு
உயிர்நீத்திருக்கிறார்கள். ஆனால் புலிகளால் எதையுமே சாதிக்க முடியவில்லை.


உலகம்
பூராகவும் பரவியிருக்கும் தமிழ் மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதி
வசூலித்திருக்கிறார்கள். அந்தந்த நாடுகளில் சொத்துக்களையும்
சேகரித்துவைத்துள்ளார்கள். அவை எவையுமே இலங்கையில் வாழும் தமிழ்
மக்களுக்கு எந்தவகையிலும் உதவியதில்லை. உதவப் போவதுமில்லை. புலிகளின்
ஆதிக்கம் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் இந்தச் சொத்துக்களைப் பராமரிக்கும்
அந்தந்த நபர்களால் சூறையாடப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.

விடுதலைப்
புலிகள் வரலாற்றுப் பதிவிலிருந்து முற்றாக அழிக்கப்படவேண்டும். இந்தச்
சந்தர்ப்பத்தில் புலிகள் அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்பதை புலம்பெயர்
உணர்ச்சித் தமிழர்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாடுகள் புலிகள்
ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள நிலையில்> புலம்
பெயர் நாடுகளில் இயங்கும் வானொலிகள் 'புலிகள் ஆயுதங்களைக் கீழே
போட்டுவிட்டு அரசியல் தீர்வொன்றுக்கு வழிவகுக்க வேண்டும்'
என்று
கலந்துரையாட தலைப்பட்டுள்ளன. இவ்வளவு காலமாக தலைவரும் தலைவற்ர கொலைகளையும்
புகழ்ந்து தள்ளிய இவ்வானொலிகள் இன்று மேற்கூறியவாறு கலந்துரையாட
தலைப்பட்டுள்ளன என்பது பெரிய மாற்றம். ஆனால் சில நேயர்களோ சிங்களவன
விடப்பிடாது> தமிழருக்கு என்றொரு நாடு வேண்டும்> வெட்டவேணும் பிடுங்க
வேணும் என்று இன்னமும் கத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

புலிகள்
தோல்வி மேல் தோல்வியடைந்து அவமானப்பட்டுக்கொண்டிருப்பது புலம்பெயர்
நாடுகளிலுள்ள உணர்ச்சித் தமிழனையும் தலைகுனிய வைப்பதனால் அவ்வப்போது
கட்டுக்கதைகளை தாராளமாகவே அவிழ்த்துத் தள்ளுகிறார்கள். அப்படி
கட்டியகதைகளில் ஒன்றுதான் குளத்தை உடைத்து ஆயிரக்கணக்கில் ஆமியை கொன்றது.
இதிலவேற குளத்தை உடைத்துவிட்டு பாஞ்ச தண்ணில 'போட்டு'ல வந்து போட்டவங்கள்
என்று புகழாங்கிதம் அடைந்தனர். தற்சமயம் ஆயிரக்கணக்கில் ஆமிய
போட்டுட்டாங்களாம் என்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் முடித்தாலென்ன
பிடித்தாலென்ன பிரபாகரனை உயிரோடையே பிணமாகவோ பிடிப்பது என்ற முடிவோடு
மகிந்த அரசாங்கம் செயற்படுகிறது. எனவேதான் இலங்கையில் இவ்வளவு காலமாக
இன்னல்களை அனுபவித்துவந்துள்ள தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களும் அகம்
மகிழ்ந்திருக்கிறார்கள். "அவங்கள் திரும்பிவருவாங்களே"
என்று சொன்னால்
"அவங்களெங்க இனி வாறாது> இஞ்ச இப்ப ஒருதருமில்ல> எல்லாரையும்
துடைச்செறிஞ்சுபோட்டான்"
என்று யாழ்குடாவில் வசிக்கும் ஒருவர்
தொலைபேசியில் மகிழ்சியுடன் குறிப்பிட்டார். இது அம்மக்கள் பட்ட வலியின் -
வேதனையின் வெளிப்பாடுதான்.

ஆனால் புலம்பெயர் நாடுகளிலுள்ள
உணர்ச்சித் தமிழரை உசுப்பிவிட்டு காசுகறக்கும் படலம் தொடர்ந்தவண்ணமே
இருக்கிறது. சற்று மாறுதலாக தமிழ் நாட்டில் உயிர்களை பலியெடுக்கும்
அரசியல் பிழைப்பு நடக்கிறது. எதுவுமே புலிகளின் அழிவை தடுத்துநிறுத்த
போதுமானதாக இல்லை. தமிழ் மக்களை அழிவிலிருந்து பாதுகாக்கவும் ஒரேயொரு
வழிதான் இருக்கிறது. அம்மக்கள் மீதான புலிகளின் இருப்புப்பிடியை
தளர்த்துவது. அதற்கு புலம்பெயர் நாட்டிலிருக்கும் உணர்ச்சித் தமிழர்களும்
தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால் புலிகளை காப்பதற்காக இவர்கள் செய்யும் அனைத்து செயற்பாடுகளுமே
புலிகளை> அழிவை நோக்கி மிகவிரைவாக உந்தித் தள்ளிச்செல்கிறது.

மொத்தத்தில்
விடுதலைப் புலிகளால் ஆனபயன் ஒன்றுமேயில்லை. அதேநேரம் விடுதலைப் புலிகளைக்
காட்டி பிழைத்துக்கொண்டவர்கள் ஏராளம் பேர். விடுதலைப் புலிகளின்
அதிகாரவெறிக்காகவும்> மேலே குறிப்பிட்டவர்களின் பிழைப்புக்காகவும் அழகான
சின்னஞ்சிறிய தீவு சின்னாபின்னாமாக்கப்பட்டு இலட்சக்கணக்கான உயிர்கள்
பறிக்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்ல ஆயிரமாயிரம் பிள்ளைகள்
அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். ஆயிரமாயிரம் இளம் தாய்மார்கள்
விதவைகளாக்கப்பட்டுமுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தம்மால் முடிந்தளவு
உயிர் அழிவுகளையும் பொருள் சேதங்களையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று நமக்குள்ள தலையாயபணி என்னவெனில் இந்த அழிவுகள் மற்றும் சேதங்களில்
இருந்து மக்களுக்கு புத்துயிரூட்டுவதும் சேதங்களிலிருந்து தேசத்தை
கட்டியெழுப்புவதுமாகும்.


அதற்கு நாம் ஒன்றுபடுவது சாலச்சிறந்தது.
அரசியல் பேதங்களை மறந்தல்ல> அரசியலை இரண்டாம் மூன்றாம் நிலைகளில்
வைத்துக்கொண்டு பாதிப்படைந்த தமிழ் மக்களுக்கான உடனடி நிவாரணியை நாம்
இணைந்து முன்னெடுக்க வேண்டும்.

ed;wp : NjdP

No comments: