Monday, 16 February 2009

எதிர்கால காய்நகர்த்தல்களுக்கு தயாராக....

பா.வி.சாந்தன் -

கருத்துத்தெரிவிக்கும் சூழல் பல நேரங்களில் மௌனத்தை தேர்ந்தெடுக்கிறது. மௌனத்தை நீண்டநாள் கடைப்பிடிப்பது சாத்தியமற்ற ஒரு விடயமே. இலங்கையிலும் உயிர்கள் செத்துமடிகின்றது. அதை செத்து மடிய வைக்கிறார்கள் தமிழர்களுக்கு விமோட்சம் தேடி 30 ஆண்டுகாலம்> சில உலக வரலாறுகளை யதார்த்த ரீதியாக மறுத்து ஆயுதத்தையே நம்பி போராடிய புலிகள் நம்பிக்கை அவர்களை தோற்கடித்ததன் மீதாகும். ஏதோ ஒரு வகையில் அரசாங்கம் களத்திலுள்ள புலிகளை குறுக்கி ஒரு குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். அதை அப்படி உருவாக்குவதற்காக இலங்கை இராணுவப்படைகளின் நுட்பமான செயல் புலிகளின் பின்வாங்கும் நுட்பத்தில் மட்டுமல்ல அது ஆயுதத்தையும்> வன்முறையையும் நம்பி விமோட்சத்திற்கு இறங்கிய புலிகளின் நம்பிக்கை உடைவு.

அதேபோல்> அரசாங்கம் எத்தணிக்கின்ற இராணுவ ரீதியான தீர்வு இந்த மாதிரியான புலிகளோடு மட்டுமேயாக இருத்திக்கொண்டு> இனரீதியாக> பிராந்திய ரீதியாக> மொழி ரீதீயாக ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு அரசியல் ரீதியான விமோட்சனத்திற்கு வழிவகுத்துக்கொடுக்க வேண்டும். அந்த வழிவகுத்துக்கொடுக்கும் எண்ணப்பாட்டை சரி காலம் பிந்திய இன்றைய நேரத்திலாது தமிழர்களுக்கு> முஸ்லீம்களுக்கு> எல்லைப்புற சிங்களவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

வரட்டு சுயகௌரவத்தை தற்காத்துக்கொள்வதற்காக புலம்பெயர் நாடுகளில் புலிகளினால் கடந்த வருடங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கரும்புலிகளால் நடாத்தப்படுகின்ற தீக்குளிப்புகளாகட்டும்> மற்றும் கவனயீர்ப்பாகட்டும் சேகரித்த நிதியையும்> அதை சேகரித்த ஒழுக்கத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவே நடாத்தப்படுகிறது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்க இருந்த சூழலை தட்டிக்கழித்துக்கொண்டு இன்றைக்கு அழிவின் விளிம்பில் பொதுமக்களை உயிர்கேடயங்களாக பாவிக்கும் புலியின் மீதும்> அதன் தலைவன் மீதும் புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை வெளிறிப்போய் உள்ளது. இந்த வெளிறிப்போன இடைவெளியையே தளமாக வைத்துக்கொண்டு புலம்பெயர் புலிகள்> யுத்தத்தின் பின்னரான முழுச்சூழ்நிலைக்கும் பொறுப்பாளிகளாக இருப்பார்கள். அதாவது புலிகளிடம் சிக்கியிலுள்ள உயிர்களை காப்பாற்றிக்கொள்ளக்கூடிய சூழல் வந்தாலும்> பெரும்பாலான உயிர்கள் அழிவதும்> அழிக்கப்படுவதுமே புலம்பெயர் புலிகளின் திட்டம் மற்றும் அடுத்த கட்டத்திற்கான அடிகோலுமாகும்.

இந்தக்கட்டத்தின் பின்னரான சூழ்நிலையில் தமிழ் அரசியல் தாங்கிச்செல்வதற்கு ஜனநாயக தமிழ் அரசியல் தலைமைகள் தயாராக இருக்கின்றனவா என்ற கேள்வி நீண்டகாலமாக வெறிச்சுப்போய் கிடப்பதுபோல் கிடப்பில் போடமுடியாது. சாதாரணமாக வன்னியிலிருந்து அரைகுறை உயிருடனும்> அரைகுறை உடல்பாகங்களுடனும் மீண்டவர்கள் அதிகம்> எஞ்சிய அங்கத்தவர்களைக் கொண்டு குடும்ச்சுமையைதாங்கும் பெண்கள் அதிகம்> பெற்றோர்களையும்> பாதுகாவரையும் இழந்த சிறுவர்கள் அதிகம் மற்றும் புலிகளால் வன்மனமாக்கப்பட்ட பலவந்த ஆட்சேர்ப்புக்கும்> முன்னாள் உறுப்பினர்களும் அதிகம் இவ்வாறாள பிரிவு உறுப்பினர்களைக்கொண்ட ஒரு சமூகத்தின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தயாராக ஒரு தளம் உருவாக்கப்பட்டிருக்கிறதா? அது ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியோ அல்லது மாற்று ஜனநாயகக் குழுக்களோ இதற்கு தயாராக இருக்கிறதா? அப்படியாயின் அவர்கள் தற்போதைய களச்சூழலில் இறங்கி செயற்பட்டுக்கொண்டிருக்கவேண்டும். ஆனால்> கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற மாஜி ஜனநாயக அரசியல் சூழலை ஒத்ததாக இருக்கக்கூடாது என்பது எதிர்காலத்தில் முகம்கொடுக்க பல சவால்களுக்கு உதவும்.

அதாவது தமிழ் மக்களுக்கான அதிகூடிய அரசியல் உரிமையைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறைகளுக்கு தடங்களாக இருக்கக்கூடாது என்பதே. முற்றுமுழுதான ஆயுதப்பாவனையற்ற ஒரு அரசியல்; எதிர்காலத்தை உருவாக்கும் பக்குவத்துடனே அரசாங்கத்துடன் பேரம்பேசும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்காக வடக்கை டக்ளசிடம் கொடுக்கவோ> கிழக்கை தொடர்ச்சியாக பிள்ளையானிடம் கொடுத்தோ நடாத்தப்படும் அரசியல் காய்நகர்ததலை ஏற்றுக்கொள்ளவது கடினமே. மாற்றுகருத்தாளர்களுடனான அரசியல் கலப்பு முன்னெடுப்புகளே ஆரோக்கியமான ஒரு சூழலை முன்னோக்கி உருவாக்கிச்செல்லும்.



source : theneeweb.de

No comments: